Breaking News

ஒத்தைக்கு ஒத்தை போட்டு பாத்துருவோமா..? அடிதடியில் இறங்கிய பிக்பாஸ் போட்டியாளர்கள்


பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் முதல் சீசனை போல இல்லை என்றாலும் ஏதோ சுமாராக ஓடிக் கொண்டிருக்கிறது. நிகழ்ச்சியின் தன்மையை உணர்ந்து போட்டியாளர்கள் அனைவரும், தங்கள் பெயருக்கு களங்கம் வந்துவிடாத அளவிற்கு விளையாடிவருவதால் சுவாரஸ்யமின்றி சென்று கொண்டிருக்கிறது நிகழ்ச்சி.

என்றாலும் 'நீங்க உஷாரான நாங்க சும்மா விட்டு விடுவோமா என்ன..?' என்கிற ரேஞ்சுக்கு போட்டியாளர்களை சீண்டி பார்க்கும் விதத்திலேயே டாஸ்குகளை கொடுத்து வருகின்றனர் பிக்பாஸ் குழுவினர்.

முன்னதாக, சர்வாதிகாரி டாஸ்கில் எக்கச்சக்க முட்டல் மோதல்கள் நிகழ்ந்திருந்த நிலையில், சமீபத்திய டாஸ்க் ஒன்றினால் போட்டியாளர்கள் டேனி மற்றும் மகத் கை கலப்பில் ஈடுபடுவது போன்ற ப்ரோமோவை வெளியிட்டு எதிர்பார்ப்பை தூண்டியிருக்கின்றனர் பிக்பாஸ் நிகழ்ச்சி குழுவினர்.

குறிப்பிட்ட டாஸ்கில் போட்டியாளர்கள் இருகுழுவினராக பிரிந்து போட்டி போட்டுக்கொண்டு பொம்மை சேகரிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். இதில் மகத் வழக்கம் போல கடுமையாக நடந்துகொள்ள, அதனை பொறுத்துக் கொள்ள முடியாத டேனி அவருடன் வாக்கு வாதத்துடன் சிறிய கைகலப்பிலும் ஈடுபடுகிறார்.


இதனால் இந்த சண்டையானது தீவிரமடைய, 'வாடா போட்டு பாக்கலாம்' என குடிகாரர்கள் சண்டை ரேஞ்சுக்கு டேனிக்கு சவால் விடுக்கிறார் மகத். இப்படியொரு பரபரப்பான ப்ரோமோ வெளியிடப்பட்டு இருந்தாலும், உண்மையில் என்ன நடக்க போகிறது என்பதை இன்று இரவு வரை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.