Breaking News

அமெரிக்காவிலும் கல்லா கட்டிய நயன்தாரா....! கோலமாவு கோகிலா படத்தின் புதிய சாதனை


லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படும் நயன்தாராவின் படங்களுக்கு முன்னனி நாயகர்களின் படங்களுக்கு இணையான வரவேற்பு இருக்கிறது.

டோரா, நானும் ரௌடிதான், அறம் என படத்திற்கு படம் மாறுபட்ட கதாப்பாத்திரங்களில் நடித்து அசத்திவரும் அவருடைய 'கோலமாவு கோகிலா' எனும் திரைப்படமும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

வசூலையும் குவித்து வரும் இந்த திரைப்படம் அமெரிக்காவில் மட்டும் சுமார் $200k வசூல் செய்துள்ளதாம். இது இந்த ஆண்டு வெளியான காலா, தானா சேர்ந்த கூட்டம், விஸ்வரூபம் 2 ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து நான்காவது அதிக வசூல் என்பதும் குறிப்பிடத்தக்கது.