Breaking News

பிக்பாஸ் நிகழ்ச்சி முரண்..! கமலுக்கு எதிராக குவியும் எதிர்ப்புகள்


பிக்பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோவில் ஒன்று காட்டபட்டால், நிகழ்ச்சியில் நடப்பது ஒன்றாக இருக்கிறது. அந்த அளவிற்கு மக்களின் எமோசன்களை தூண்டிவிட்டு விட்டு, இறுதில் புஸ்வானமாக சென்று கொண்டிருக்கிறது அந்நிகழ்ச்சி.


அதிலும் குறிப்பாக 'மக்களின் வாக்கு அடிப்படையில் போட்டியாளர்கள் நீக்கப்படுவது இல்லை' என்று சந்தேகத்தை கிளப்பும் அளவிற்கு தான் இருக்கிறது எலிமினேசன்கள். அதனை இதுவரை எலிமினேட் ஆனவர்களை வைத்தே நாம் தெளிவாக புரிந்து கொள்ளலாம்.

மமதி, அனந்த் வைத்தியநாதன், ரம்யா, ஷாரிக் (நித்யா தவிர) என எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்கள் அனைவருமே ஒரு பரபரப்பான சூழலை பிக்பாஸ் வீட்டில் எற்படுத்தாதவர்கள்.

யாசிகா, ஐஸ்வர்யா, மகத் என பெரும்பாலான மக்களிடம் எக்கச்சக்க வெறுப்பை சம்பாதித்தவர்கள் எலிமினேசன் லிஸ்டில் இருந்தும் வெளியேறாமல் இருப்பதும் ஆச்சர்யம் தான்.

இத்தகைய முரண்பாடான சூழ்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்க, 'சென்ற சீசனில் செயல்பட்டதை போல நடிகர் கமல் போட்டியாளர்களை சரிவர ஒழுங்கு படுத்தாமல், தன் அரசியல் விமர்சன மேடையாக மட்டுமே அந்நிகழ்ச்சியை உபயோகித்து வருகிறார்' என குற்றம் சாட்ட துவங்கியுள்ளனர் ரசிகர்கள்.


சென்ற வாரம் நிகழ்ந்த சர்வாதிகாரி பஞ்சாயத்தில், ஐஸ்வர்யா எல்லை மீறி நடந்து கொண்ட போதும், அவருக்கான குறும்படம் ஏதும் ஒளிபரப்பபடாமல், பாலாஜியின் குறும்படம் ஒளிபரப்பட்டதிலும்,  எக்கச்சக்க விமர்சனங்கள் எழுந்திருந்தது.

இதனை சுட்டி காட்டி, பிக்பாஸ் நிகழ்ச்சியின் ரசிகர்கள் பலர், 'டிவி நிர்வாகத்துடன் இணைந்து; நிகழ்ச்சியின் விறுவிறுப்பை கூட்டும் முனைப்போடு, கமல்; ஐஸ்வர்யாவின் பக்கம் ஆதரவு காட்டுகிறார்' எனவும் சமூக வலைதலங்களில் விமர்சித்து வருகின்றனர்.


இது குறித்த மீம்ஸ்களும் பரவலாக வலம்வரும் நிலையில், 'முதல் சீசனில் கமல் சம்பாதித்த பெயரை இந்த சீசனில் இழந்து விடுவாரோ' என்று ஒரு சில கமல் ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தி இருக்கிறது மக்களின் இந்த மனநிலை.