Breaking News

கலைஞர் கருணாநிதி மறைவு..! பிக்பாஸ் வீட்டிலும் தொற்றிக் கொண்ட சோகம்


தமிழக முன்னால் முதல்வர் 'கலைஞர் கருணாநிதி' அவர்கள் நேற்று காலமானதை தொடர்ந்து, ஒட்டு மொத்த தமிழகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. இதுவரை ஒரு அரசியல்வாதியாக அவரை வெறுத்தவர்கள் கூட தமிழுக்கு அவர் ஆற்றிய பங்கினை நினைவு கூறி அவரது மறைவுக்கு இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், வெளியுலக தொடர்பு ஏதும் இன்றி விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்களுக்கு இந்த செய்தியானது இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து சமீபத்தில் வெளியான ப்ரோமோ ஒன்றில், பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரையும் அழைத்து கலைஞர் அவர்கள் மறைந்தது குறித்த அதிர்ச்சியான தகவலை தெரிவிக்கின்றார்.

இதனை கேட்டு போட்டியாளர்கள் அனைவரும், மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளானதுடன் அவரது மறைவிற்காக இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தும் காட்சிகளும் அந்த ப்ரோமோவில் காட்டப்பட்டு உள்ளது.

இதனால் தமிழகத்தில் இன்று நிலவும் ஒரு சோகமான நிலையானது, இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் நிலவும் என எதிர்பார்கப்படுகிறது.