Breaking News

"கிகி" சேலஞ்ச் விபரீதம்..! வீல் சேரில் வித்யாசமாக 'காஜல்' சொன்ன அட்வைஸ்


உலக இளசுகளை ஆட்டி படைத்து கொண்டிருக்கிறது இந்த 'கிகி சேலஞ்ச்' எனும் விபரீத சவால். கனடாவை சேர்ந்த டிரேக் எனும் பாடகர் வெளியிட்ட 'இன் மை ஃபீலிங்க்ஸ்' என்ற பாடலுக்கு ஓடும் காரின் பக்கவாட்டில், ஒருவர் நடனமாடி கொண்டே வர, ஓட்டுனர் அதை படம் பிடிப்பதுதான் இந்த கிகி சேலேஞ்ச்.

கேட்க வித்யாசமாக இருப்பதாலும், வெளிநாட்டு கலாச்சார மோகத்தாலும் இந்திய இளசுகளையும் கவர்ந்த இந்த சவாலானது, கவன குறைவுகளால் எக்கச்சக்க சாலை விபத்துக்களுக்கும் வித்திட்டது.

மேலும் விபரீதங்கள் ஏற்படாமல் இருக்க, பல்வேறு மாநிலங்களில் இந்த சவாலுக்கு தடையும் விதிக்கப்பட்டு உள்ளது. ஆங்காங்கே பல விழிப்புணர்வு பலகைகளும் அரசின் சார்பில் வைக்கப்பட்டு வருகிறது.   
இந்நிலையில் நடிகை காஜல் அகர்வாலும் தன் பங்கிற்கு மக்களுக்கு விழிப்புணர்வு  ஏற்படுத்தும் விதத்தில் வீடியோ ஒன்றினை வெளியிட்டு இருக்கிறார்.

வீல் சேரில் அமர்ந்தவாறு நெற்றியில் காயத்துடன் இருப்பது போன்ற கெட்டப்பில், கிகி சேலஞ்ச் பாடலுக்கு நடனமாடிய அவர், 'எங்களை போல உங்களுக்கும் அடிபடாமல் இருக்க இது போன்ற விபரீத சவால்களை தவிருங்கள்' என ஒரு மெசேஜையும் சொல்லி ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்து வருகிறார்.