Breaking News

அதிக மக்களை தியேட்டருக்கு வரவைத்த திரைப்படம்..! காலாவை பின்னுக்கு தள்ளி சாதனை


2018ம் ஆண்டு வெளியாகிய திரைப்படங்களில் அதிகம் பேரால் தியேட்டரில் பார்க்கப்பட்ட திரைப்படம் குறித்த தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டு மட்டும் நூற்றிற்கும் மேலான திரைப்படங்கள் வெளியாகி இருந்த நிலையில், சில வாரங்கள் முன்பு வரை '2018ம் ஆண்டின் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட திரைப்படம்' என்ற பெருமையை பெற்றிருந்தது ரஜினியின் காலா.

இந்நிலையில் காலா திரைப்படத்தின் இந்த சாதனையை முறியடித்து தற்பொழுது முதல் இடத்தை பிடித்திருக்கிறது கார்த்தியின் 'கடைக்குட்டி சிங்கம்' திரைப்படம்.

முழுக்க முழுக்க குடும்பப்பாங்கான திரைப்படமாக உருவாகி இருந்ததும், விவசாயத்தின் பெருமையை பேசி இருந்ததுமே அனைத்து தரப்பு மக்களையும் தியேட்டர் பக்கம் வரவைத்ததன் முக்கிய காரணமாக அமைந்திருந்தும் குறிப்பிடத்தக்கது.