Breaking News

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் ஜனனி செய்யபோகும் காரியம்


பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன், எதிர்பார்த்ததை போல் இல்லாமல் போனாலும் ஓரளவுக்கு சுமாராகவே சென்று கொண்டிருக்கிறது.

மக்கள் ஓட்டுகள் தான் வெளியேறும் போட்டியாளர்களை தீர்மானிக்கிறது என அந்நிகழ்ச்சி நிர்வாகத்தினரால் சொல்லிக் கொள்ளப்பட்டாலும், மக்கள் கருத்திற்கு மாறான நபர்களே வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

சென்ற வாரம் யாரும் எதிர்பாராத விதத்தில் RJ வைஷ்ணவி வெளியேறி இருந்தார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன் சர்ச்சைகள் ஏதும் இன்றி ஓரளவு பிரபலமாக இருந்தவரும்,

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு எதிர்மறையான பிரபலத்தை பெற்றிருப்பவருமான ஜனனி ஐயர், தான் வெளியேறியதும் செய்யப்போகும் முதல் வேலை குறித்த திட்டத்தை ஏற்கனவே போட்டு வைத்துவிட்டதாக அவரது சகோதரி நேர்காணல் ஒன்றில் தெரிவித்து இருக்கிறார்.

இது குறித்து பேசி இருந்த அவரது சகோதரி, ஜனனியின் வெளிநாடு சுற்றுலா குறித்த அந்த திட்டத்தை பற்றி பலர் முன்னிலையில் போட்டுடைத்து இருக்கிறார்.