Breaking News

கமல் இல்லாமலே துவங்கும் இந்தியன்-2


உலக நாயகன் கமல் ஹாசனின் நடிப்பில் 22 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்து மாபெரும் வெற்றிப் பெற்ற திரைப்படம் இந்தியன். இதன் இரண்டாம் பாக அறிவிப்பு சென்ற வருடமே வெளியாகிவிட்ட நிலையில், தற்பொழுதுதான் அதற்கான பணிகள் நடைபெற துவங்கியுள்ளது.

இந்த படத்திற்கான ஸ்கிரிப்ட் சம்பந்தமான பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், முதற்கட்ட படபிடிப்புக்காக தாய்லாந்தில் படப்பிடிப்பு பகுதிகளை தேர்வு செய்யும் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கமல் நடிக்க இருக்கும் காட்சிகள் அடுத்த வருடத்தின் துவக்கத்தில் படமாக்கப்பட இருக்கும் நிலையில், கமல் இடம் பெறாத பிற காட்சிகளை விரைவில் படமாக்க இருக்கிறாராம் இயக்குனர் சங்கர்.

இதனால் இந்தியன்-2 படத்தின் ஆரம்பகட்ட படப்பிடிப்புகள் நாயகன் கமல் இல்லாமல் நடக்க இருப்பதும் உறுதியாகியுள்ளது.