Breaking News

ரசிகர்களை முகம் சுளிக்க வைத்த முத்தம் ; டேனியலின் காதலி செயலால் அதிர்ச்சி


பிக்பாஸ் சீசன்-2 நிகழ்ச்சி 70 நாட்களை கடந்து இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. தற்பொழுது மிச்சம் இருக்கும் போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகின்றனர்.

இதனால் பாசம், கண்ணீர், சிரிப்பு, அழுகை என பல நெகிழ வைக்கும் சம்பவங்களை ரசிகர்கள் கண்கூடாக பார்த்து வருகின்றனர். இப்படி இருக்க நேற்றைய எபிசோடில் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த டேனியலின் காதலி, ஒரு ரொமாண்டிக்கான சூழ்நிலையை அங்கே ஏற்படுத்தி இருந்தார்.

வீட்டிக்குள் நுழைந்ததுமே அனைவர் முன்னிலையிலும் டேனியலுக்கு முத்த மழை பொழிந்து ரசிகர்களை அதிர்ச்சியிலும் ஆழ்த்தினார். இவரது இந்த செயல் முகம் சுளிக்க வைப்பது போன்று இருந்ததாகவும் ஒரு சில ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.