Breaking News

நித்யாவை மனம் உருக வைத்த தாடி பாலாஜியின் கண்ணீர்..! பிக்பாஸ் மூலம் ஏற்பட்ட மனமாற்றம்


நித்யா, தாடி பாலாஜி தம்பதியினரின் திருமண முறிவு குறித்த செய்தி நாம் அறிந்ததே. விவாகரத்தின் விளிம்பில் நிற்கும் இவர்களது உறவை பிக்பாஸ் நிகழ்ச்சி சரி செய்யும் என்றே ரசிகர்கள் பலரும் ஆவலாக காத்திருந்தனர். அவர்கள் ஆசைப் பட்ட படியே அப்படியொரு மாற்றத்தை பிக்பாஸ் நிகழ்ச்சி கொண்டு வந்துவிட்டது.

முன்னதாக மனைவி குழந்தையுடன் மீண்டும் இணைவோம் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்த தாடி பாலாஜிக்கு, நித்யா எழுதிய கடிதம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதில் நித்யா குறிப்பிட்டிருந்த 'ஒரு நல்ல தோழியாக மட்டுமே இருப்பேன்' என்ற வார்த்தை பாலாஜியின் நம்பிக்கையை தகர்த்தது. இதனால் அவர் கண்ணீர் விட்டு அழுததையும் நாம் பார்த்திருந்தோம்.

இந்நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் வரும் நித்யா, பாலாஜி கண்ணீர் விட்டு அழுததை தன்னால் தாங்க முடியவில்லை எனக்கூறி மன்னிப்பு கேட்டதுடன் தானும் கண் கலங்கினார்.

இதன் ப்ரோமோ தற்பொழுது வெளியாகி இருக்கும் நிலையில், நித்யா தாடி பாலாஜி தம்பதி மீண்டும் இணைவார்கள் என்ற நம்பிக்கை ரசிகர்களிடையே உருவாகி இருக்கிறது.