Breaking News

ஐஸ்வர்யாவிடம் எல்லை மீறிய சென்றாயன்! வெளிவந்தது உண்மை முகம்


பிக்பாஸ் வீட்டில் வெகுளியான ஒருவராக ஒரு தோற்றத்தில் வாழ்ந்து வருபவர் காமெடி நடிகர் சென்றாயன். அனால் இன்றைய எபிசோடில் அவர் ஐஸ்வர்யாவிடம் நடந்து கொண்ட விதம், இதுதான் அவரது உண்மை முகம் என ரசிகர்களை பேச வைத்திருக்கிறது.

ஒன்றும் தெரியாதவராக வெகுளியான ஒருவராகவே இருந்து வருகிறார் சென்றாயன். பிறர் கோபப்பட்டாலும் பணிந்து போகும் இவர் வெளியுலகில் கடும் கோபக்காரர் என்பதை அவரது மனைவியே நேர்காணல் ஒன்றில் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் அவர் மறைத்து வைத்திருந்த உண்மை முகமானது இப்பொழுது ஐஸ்வர்யாவல் வெளிவந்துள்ளது. பிக்பாஸ் வீட்டிலும், ரசிகர்களிடமும் தனது அடாவடியான நடவடிக்கைகளால் வெறுப்பை சம்பாதித்து இருக்கும் போட்டியாளர் ஐஸ்வர்யா.

இவரது நடவடிக்கைகள் சென்றாயனுக்கு கோபத்தை ஏற்படுத்த, பதிலுக்கு அவரது முடியை பிடித்து இழுப்பது போன்ற காட்சிகள் அடங்கிய இன்றைய எபிசோடின் ப்ரோமோ தற்பொழுது வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

என்னதான் ஐஸ்வர்யா செய்வது தவறாக இருந்தாலும் ஒரு பெண்ணை தாக்குவது போன்ற நடவடிக்கைகளை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது என சென்றாயனின் செயல் குறித்து பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.