Breaking News

'பாகுபலியை பார்க்கணும்' மருத்துவமனையில் அடம்பிடித்த சிறுவன்..! பறந்து வந்த பிரபாஸ்


பிரபல தெலுங்கு நடிகரான பிரபாஷுக்கு பாகுபலி படத்திற்கு பின் எக்கச்சக்க ரசிகர்கள் உலகம் முழுவதும் உருவாகியுள்ளனர். குறிப்பாக குழந்தை ரசிகர்கள் அவருக்கு ஏராளம். இந்நிலையில் உடல் நிலை சரியில்லாமல் போன சிறுவன் ஒருவனின் ஆசையை பாகுபலியாக நிறைவேற்றி வைத்திருக்கிறார் பிரபாஸ்.

பாகுபலி படத்தினை பார்த்துவிட்டு, பாகுபலி காதாப்பாத்திரத்தின் தீவிர ரசிகர் ஆகி இருக்கிறார் ஹைதராபாத்தை சேர்ந்த மதன் ரெட்டி எனும் சிறுவன். சமீபத்தில் இவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்த நிலையில், பாகுபலியை நேரில் பார்க்க வேண்டும் என அடம் பிடித்திருக்கிறார்.

அவரது பெற்றோரும் தங்கள் மகனின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு அட்டையில் மதன் ரெட்டியின் ஆசையை எழுதி அதனை அவர் கையில் ஏந்தியவாறு புகைப்படம் எடுத்து வெளியிட்டனர்.

இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, பிரபாஸ் ரசிகர்கள் வாயிலாக அவரது கவனத்திற்கு கொண்டு செல்லப்பட, தனது குட்டி ரசிகரை மருத்துவமனையில் சென்று சந்தித்தித்து மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார் பிரபாஸ்.


மேலும் மதன் ரெட்டி மற்றும் அவரது பெற்றோரை தனது இல்லத்திற்கும் அழைத்து இன்ப அதிர்ச்சி அழித்திருக்கிறார். இப்படியொரு நெகிழ்ச்சியான சம்பவத்தை பற்றி கேள்விப்பட்ட பிரபாஸ் ரசிகர்கள், அவரை புகழ்ந்து வருகின்றனர்.