Breaking News

கேரள மக்களுக்காக மேடையில் A.R.ரஹ்மான் செய்த காரியம்..! வைரலாகும் வீடியோ


கேரளாவில் பெய்து வரும் வரலாறு காணாத மழையினால் முழு மாநிலமே வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. லட்சக்கணக்கானோர் தங்களது வீடு மற்றும் உடைமைகளை இழந்து, போதுமான அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் தவித்து வரும் நிலையில் ஒட்டு மொத்த இந்தியாவும் கைகோர்த்து கேரள மக்களுக்காக உதவிகளை செய்து வருகிறது.

பொது மக்கள், சினிமா பிரபலங்கள் என பல தரப்பட்டவர்களும் தாங்களாக முடிந்த உதவியினை உதவி தொகையாகவோ, அத்தியாவசிய பொருட்களாகவோ செய்து வருகின்றனர்.

இந்நிலையில் உலக புகழ் பெற்ற இசையமைப்பாளரான A.R.ரஹ்மான் தான் அமெரிக்காவில் நடத்திய இசை நிகழ்ச்சி ஒன்றில் தனது முஸ்தப்பா பாடலை மாற்றியமைத்து கேரளா மக்களுக்கு ஆறுதல் சொல்லும் விதத்தில் பாடி இருந்தார்.

சமூக வலைதளங்களில் அந்த நிகழ்வின் காணொளி வெளியாகி தற்பொழுது அதிக அளவில் மக்களால் பகிரப்பட்டு வருகிறது.