Breaking News

ஜோதிடர்களால் கோவில் கோவிலாக சுற்றும் நடிகை அனுஷ்கா


திரையுலகில் பத்து வருடங்களுக்கு மேலே முன்னணி நாயகியாக நிலைத்து இருப்பவர் நடிகை அனுஷ்கா. தற்பொழுது கவர்ச்சி வேடங்களை தவிர்த்து நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் நடித்து வரும் இவர், பல ஆண்டுகளுக்கு முன்னரே திருமணம் செய்துகொள்ளும் முடிவை எடுத்து விட்டார்.

என்றாலும் அவருக்கான சரியான வரன் அமையாமல் தவித்து வருகின்றனர் அனுஸ்காவின் பெற்றோர். இந்நிலையில் அவருக்கு விரைவில் திருமணம் நடக்க தோஷ நிவாரண பூஜை செய்யவேண்டும் என்ற ஜோதிடரின் அறிவுரைப் படி கோவில் கோவிலாக சென்றுவருகிறார் அனுஷ்கா.

குறிப்பிட்ட பூஜைகளை சமீபத்தில் செய்து முடித்திருந்த அவர், நீண்ட இடைவெளிக்கு பின் திரைத்துறைக்கு மீண்டும் திரும்பி, 'சைலன்ட்' எனும் திகில் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.