Breaking News

இனிமேல் அதற்கு நோ.....!!! ஆண்ட்ரியா போடும் புதிய கண்டிஷன்


பெரும்பாலான தமிழ் திரைப்பட நாயகிகள் நடிக்க தயங்கும் சர்ச்சையான வேடங்களில் தொடர்ந்து நடித்து தனித்துவமான நடிகை என பெயர் எடுத்து இருப்பவர் நடிகை ஆன்ட்ரியா.

நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதை என்றால் கிளாமர் காட்சிகளிலும் பட்டையை கிளப்பிவிடும் அவர், இனிமேல் அப்படிப்பட்ட கிளாமர் வேடங்களில் நடிக்க போவதில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம்.

என்னதான் கஷ்டப்பட்டு நன்றாக நடித்து கதாப்பாத்திர நடிகை என பெயர் எடுக்க முயற்சித்தாலும், அவ்வபோது கிளாமர் காட்டி நடிக்கும் காட்சிகளால் ''கவர்ச்சி நடிகை'' என்ற பெயரே கிடைத்திருப்பதுதான் இவரது இந்த முடிவுக்கு காரணம் எனவும் கிசு கிசுக்கிறது கோலிவுட் வட்டாரங்கள்.