Monday, 27 August 2018

அசைவமா ஆள விடுங்க.... எமி ஜாக்சனின் திடீர் முடிவு பின்னணியில் பீட்டா..?


லண்டன் பெண்ணான எமி ஜாக்ஸன் மதராசபட்டினம் படத்தின் மூலம் இந்திய சினிமாவில் அடியெடுத்து வைத்தவர். தொடர்ந்து ரஜினி, விஜய், விக்ரம் என பல முன்னனி நடிகர்களின் படங்களில் நடித்து விட்ட இவர் ஒரு தீவிர அசைவ பிரியை.

தற்பொழுது அமெரிக்க இணைய தொடர்களில் நடித்து வரும் இவர் உலக அளவில் ரசிகர்களை பெற துவங்கி இருக்கும் நிலையில், ஹாலிவுட்டில் காலடி எடுத்து வைக்கும் முயற்சியிலும் இறங்கி இருக்கின்றாராம்.

இதனால் தனது அழகை மேலும் மெருகூட்ட எண்ணிய அவருக்கு நட்பு வட்டாரங்கள் கொடுத்த அறிவுரையின் படி சுத்த சைவத்திற்கு மாறி விட்டதாக கிசு கிசுக்கிறது கோலிவுட் வட்டாரம்.

என்றாலும் பீட்டா விலங்குகள் நல அமைப்பின் விளம்பர தூதராகவும் அவர் இருந்துவந்த நிலையில், எமி ஜாக்சனின் இந்த மாற்றத்துக்கு பின்னணியின் அவர்களும் இருக்கலாம் எனவும் பேசப்பட்டு வருகிறது.
Disqus Comments
'