Breaking News

அஜித் திரைப்படத்தை இயக்க மறுத்த வினோத்..?


வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என "V" வரிசையில் சிவாவின் இயக்கத்தில் தொடர்ந்து நான்காவது திரைப்படத்தில் நடித்து வருகிறார் அஜித். விஸ்வாசம் திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

அந்த திரைப்படத்தினை தொடர்ந்து 'தீரன் அதிகாரம் ஒன்று' வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தது. கிட்டத்தட்ட இந்த தகவல் உறுதியான நிலையில் அதில் இருந்து இயக்குனர் வினோத் வெளியேறி விட்டதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

வினோத் இயக்கத்தில் உருவாக இருந்த அத்திரைப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்க இருந்த நிலையில், அவரின் வேண்டுகோளுக்கு இணங்க ஒரு பாலிவுட் பட ரீமேக்கில் நடிக்க அஜித் ஒப்புகொண்டதாகவும், தனது கதைக்கு பதிலாக இந்த ரீமேக் படத்தினை வினோத் அவர்களை இயக்க சொன்னதுமே, இந்த திடீர் விலகலுக்கு காரணம் எனவும் திரைத்துறையில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.