Breaking News

'குளிக்க மினரல் வாட்டர்தான் வேணும்' - படப்பிடிப்பில் நடிகை செய்த அளப்பறை


#சினிமா சீக்ரெட்ஸ் 

முன்னேறும் வரை மூச்சு காட்டாமல் இருந்து விட்டு மார்கெட்டில் வளர்ந்து விட்டால் தைய தக்கா என ஆட்டம் போடும் ஒரு சில நடிக நடிகைள் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

தயாரிப்பாளர்களின் பெண்டை நிமிர்த்தி விடும் இது போன்ற திரையுலகினர், இந்த அடாவடி செயல்கள் தங்களது மார்கேட்டையே புரட்டி போட்டுவிடும் எனும் உண்மையை பட்ட பிறகுதான் புரிந்து கொள்கிறார்கள்.

இப்படி தயாரிப்பாளர்களை நடுநடுங்க வைக்கும் இளம் நடிகை ஒருவர், தண்ணீர் பிரச்சனையால் படப்பிடிப்புக்கு வராமல் இழுத்தடித்த சம்பவம் கோலிவுட்டில் நிகழ்ந்தேறியுள்ளது.

வாரிசு நடிகர் ஒருவரின் சகோதரர் திரைப்படத்தில் அறிமுகமானவர் இந்த இளம் நடிகை. பாம்பினை மையமாக கொண்ட பழைய திரைப்படத்தின் ரீமேக்கில் நடித்து வரும் இவர், குளிக்க மினரல் வாட்டர் கொடுக்கும் வரை படப்பிடிப்புக்கு வருவதில்லை என அடம் பிடித்து தயாரிப்பாளரை அல்லோல் படுத்தி இருக்கிறார்.

வேறு வழிதெரியாமல் அவர் கேட்டபடியே படப்பிடிப்பு முடியும் வரை அம்மணி குளிக்க மினரல் வாட்டர் சப்பளை செய்திருக்கிறார்கள் படக்குழுவினர்.

நல்லவேளை கழுதை பால் கேட்காமல் விட்டாரே...!   


இதையும் கொஞ்சம் படிங்க 

அடாவடி நடிகையை அடக்கி வாசிக்க வைத்த கெட்ட நேரம்