Breaking News

அஜித்தாக ஆசைபட்டு திண்டாட்டத்தில் இளம் நடிகர்


நடிகர் அஜித் திரையுலகை தாண்டி அவரது நல்ல செய்கைகளுக்காகவும் பெயர் எடுத்தவர். இவரது உதவும் மனப்பான்மையும் பிற துறைகளில் இருக்கும் வியக்க வைக்கும் திறமையும், திரையுலகிலேயே இவருக்கு எக்கச்சக்க ரசிகர்களை பெற்று தந்திருக்கிறது.

இளம் நடிகர்கள் பலரும் அஜித் தான் தங்களது ரோல் மாடல் என்று கூறும் நிலையில், இந்த தலையாட்டி நடிகர் மட்டும் ஒருபடி மேலே போய், அஜித்தின் பழக்க வழக்கங்கள், பிற துறைகளில் இருக்கும் திறமைகள் ஆகியவற்றை காப்பி அடிக்க துவங்கினார்.

அஜித்தை போல கார் மற்றும் பைக் பந்தயங்களில் சாதிக்கும் முனைப்போடு, தீவிரமாக பயிற்சி எடுத்து வந்த நிலையில், சினிமா பக்கம் அதிக கவனம் செலுத்தாமல் இருந்து வந்தார்.

இதனால் படவாய்புகளும் குறைந்த நிலையில், பந்தயங்களிலும் சொல்லிகொள்ளும் அளவிற்கு அவரால் ஜொலிக்க முடியவில்லை. இதனால் பின்வாங்கிய அந்த இளம் நடிகர், மீண்டும் சினிமா பக்கம் கவனம் செலுத்த துவங்கி இருக்கிறாராம்.