Thursday, 16 August 2018

நடுரோட்டில் விளம்பரம் செய்த நடிகர்..! போலீஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை


திரைப்பட விளம்பரங்கள்; போஸ்டர், பேனர்களை தாண்டி தற்பொழுது சமூக வலைதளங்களில்தான் பரவலாக செய்யப்பட்டு வருகிறது. இதற்காக வித்யாசமான விசயங்களை குறிப்பிட்ட திரைப்பட பிரபலங்கள் செய்து வருவதும் நாம் அன்றாடும் காணும் விஷயமாகி இருக்கிறது.

இதேபோல பிரபல பாலிவுட் நடிக நடிகைகள் இருவர் விளம்பரத்திற்காக செய்த காரியம் போலீஸ் நடவடிக்கை எடுக்கும் அளவிற்கு சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பிரபல பாலிவுட் இளம் நடிகரான ஆயுஸ் ஷர்மா, நடிகை வாரினா ஹுசேன் உடன் அவர்கள் நடிக்கும் படத்தின் விளம்பர நோக்கத்தில், இரு சக்கர வாகனத்தில் சென்று சாலையில் பயணித்த பிறரோடு சகஜமாக பேசி இருந்தனர்.

இந்த சம்பவம் வீடியோவாக வெளிவந்து வைரலான நிலையில், அதனை பார்த்த போலீசார் ஹெல்மெட் அணியாமல் சென்ற காரணத்திற்காக இருவருக்கும் தலா நூறு ரூபாய் அபராதத்தை, அவர்கள் தங்கி இருந்த அறைக்கே சென்று விதித்துள்ளனர். 
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();