Breaking News

நடிகர் பரத்துக்கு கிடைத்த இரட்டை சந்தோசம்...! குவியும் திரையுலகினரின் வாழ்த்துக்கள்


தமிழ் திரைப்பட நடிகர் பரத்-ஜெஸ்சி தம்பதியினருக்கு இரட்டை குழந்தை பிறந்த இரட்டிப்பு மகிழ்ச்சியான தகவல் வெளிவந்துள்ளது.

பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் பரத். நடிப்பு, நடனம் என்று கலக்கிய இவர் கடந்த 2013ம் ஆண்டு ஜெஸ்சி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

துபாயை சேர்ந்த பல் மருத்துவரான ஜெஸ்சி நட்பு வாட்டரங்கள் மூலம் பரத்துக்கு அறிமுகமானவர். சில வருடங்கள் நட்பாக பழகி வந்த இவர்கள் காதலில் விழுந்ததை தொடர்ந்து, இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி, இந்த தம்பதியினருக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது. இந்த தகவலை நடிகர் பரத்தும் அதிகாரபூர்வமாக தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்து இருந்தார். இந்த இனிய செய்தியை கேள்விப்பட்ட சினிமா பிரபலங்கள் பலரும் பரத்திற்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


சில வருடங்களாக சினிமாவில் பெரிய அளவில் ஜொலிக்காமல் இக்கட்டான சூழ்நிலையில் இருந்து வந்த நடிகர் பரத்துக்கு, இரட்டையர்களின் வரவு இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.