Breaking News

நடிகர் விஜயை தேடி வந்த மற்றுமொரு வெளிநாட்டு அங்கீகாரம்..! உற்சாகத்தில் ரசிகர்கள்


தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய், இந்திய திரையுலகில் படைத்த சாதனைகளை தாண்டி தற்பொழுது, ஹாலிவுட் லெவலில் சாதிக்க துவங்கி இருக்கிறார்.

முன்னதாக சிறந்த நடிகர் மற்றும் சிறந்த உலகளாவிய நடிகர் ஆகிய பிரிவுகளின் கீழே நடிகர் விஜயின் பெயர், IARA எனும் உலகலாவிய விருது வழங்கு விழா ஒன்றில் இடம் பெற்று இருந்தது. இந்திய நடிகர்களில் முதன் முதலாக விஜயின் பெயர் இந்த பட்டியலில் இடம் பிடித்திருந்ததை ரசிகர்களும் விமர்சையாக கொண்டாடினர்.

இப்படி இருக்க சர்வதேச திரைப்பட விழா ஒன்றில், விஜயின் மெர்சல் திரைப்படம் திரையிடப்பட்டு மேலும் ஒரு கௌரவத்தை நடிகர் விஜய்க்கு வழங்கி இருக்கிறது.

புஜெயான் நகரில் நடைபெற்ற, 'தி புஜெயான இண்டர்நேசனல் ஃபில்ம் ஃபெஸ்டிவல்' எனும் குறிப்பிட்ட அந்த விழாவில், உலகம் முழுவதிலும் இருந்து சிறந்த திரைப்படங்கள் திரையிடப்பட்டன.

இதில் சிறந்த ஆசிய திரைப்பட பிரிவில் தேர்வாகி, விஜயின் மெர்சல் திரைப்படமும் திரையிடப்பட்டு இருக்கிறது. தமிழ் திரையுலகிற்கே பெருமை சேர்த்த இந்த சம்பவம் குறித்து, அப்படத்தின் தயாரிப்பாளரான ஹேமா ருக்மணி அவர்கள் தனது சமூக வலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார்.