Breaking News

எப்படி இருந்தவங்க இப்படி ஆகிட்டாங்களே..? ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய விஷால் பட நாயகி


விஷால் நடித்த தீராத விளையாட்டு பிள்ளை திரைப்படத்தில், பிரகாஸ்ராஜின் தங்கையாக செம குத்தாட்டம் ஒன்றையும் போட்டிருந்தவர் தனுஸ்ரீ. அதன் பிறகு அவரை பிற தமிழ் திரைப்படங்களில் பார்க்க முடியவில்லை.

என்றாலும் தொடர்ந்து ஒரு சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்த இவர், சில ஆண்டுகளாக என்ன ஆனார் என்றே தெரியாத அளவிற்கு, சினிமா விழாக்களில் கூட கலந்து கொள்ளவில்லை.

இதனால் இவரை ரசிகர்கள் முழுமையாக மறந்து போயிருந்த நிலையில், திடீரென மீடியாக்களால் மீண்டும் கண்டு பிடிக்க பட்டிருக்கிறார். அதுவும் அதிக உடல் எடையுடன்,  'அவரா இவர்' என அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதத்தில்.

இறுதியாக அப்பார்ட்மென்ட் எனும் திரைப்படத்தில் நடிதிருந்த இவர், இரண்டு வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவில் செட்டிலாகி விட்டார். அதன் பிறகு இப்பொழுதான் இந்தியாவில் காலடி எடுத்து வைத்திருக்கிறார் எனும் நிலையில், அவரது இந்த தோற்றம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.