Breaking News

இவருக்கா இப்படியொரு நிலைமை..? விரைவில் கைதாகும் அபாயத்தில் முன்னணி நடிகர்


திரையிலும் நிஜ வாழ்விலும் நாயகனாகவே இருக்கும் நடிகர்கள் மிக மிக குறைவு. அப்படி ஒரு குறையை நிவர்த்தி செய்ய வந்தவராய், ரீல் லைஃப்பில் மட்டுமல்லாது ரியல் லைஃப்பிலும் மக்களுக்கு குரல் கொடுத்து வருபவர் இந்த நடிகர்.

காவிரி பிரச்சனை, ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் என அரசுக்கு எதிராக சிறிதும் தயங்காது கருத்து தெரிவித்து வரும் இவர், பல அரசியல் எதிரிகளை சம்பாரித்து இருப்பதாக தெரிகிறது.

விளைவு, உளவு துறையின் தீவிர கண்காணிப்பில் இருக்கிறாராம் நடிகர். இதனால் அவரது சிறு சிறு செயல்களையும் உன்னிப்பாக கவனித்து வரும் போலீசார், அரசுக்கு எதிராக பிரச்சாரங்கள் மற்றும் போராட்டங்கள் செய்யும் அமைப்புக்கு நிதி உதவி செய்து வருவதையும் கண்டறிந்துள்ளனராம்.

இவரது இந்த நடவடிக்கை தொடருமாயின் ஹிந்தி திரையுலகில் சஞ்சய் தத்துக்கு ஏற்பட்டது போன்று சிறை செல்லும் நிலை, இவருக்கும் ஏற்படலாம் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.