Breaking News

விவசாயிகளுக்காக நடிகர் சூர்யா செய்யும் மாபெரும் உதவி..! கொண்டாடும் ரசிகர்கள்


நடிகர் சூர்யா நேற்று தனது 43வது பிறந்தநாளை கொண்டாடி இருந்த நிலையில், பலர் வியக்கும் விதத்தில் விவசாயிகளுக்கு உதவி இருக்கிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, அகரம் எனும் தொண்டு நிறுவனத்தின் மூலம் ஏழை மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவிகளை செய்து வருகிறார்.

இவரால் லட்ச கணக்கான மாணவர்கள் பயநடைந்திருந்த நிலையில், நேற்று தனது பிறந்த நாள் என்பதை முன்னிட்டு, 400 அரசு பள்ளிகளின் கழிப்பறைகளை புதிப்பிக்க இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார்.

சூர்யாவின் இந்த செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், தான் தயாரித்து தனது சகோதரர் கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் திரைப்பட வெற்றியை கொண்டாடும் விதத்தில், தமிழக விவசாயிகள் நல சங்கத்திற்கு சுமார் 1 கோடி ரூபாயை உதவி தொகையாக வழங்கி மேலும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறார்.