Breaking News

மோசமான உடல்நிலை..! கருணாநிதியை நேரில் சந்தித்த முன்னணி தமிழ் நடிகர்


பழம்பெரும் அரசியல்வாதி, எழுத்தாளர், திமுக கட்சியின் தலைவர் என பல பெருமைகளை உடையவர் கலைஞர் கருணாநிதி. தற்பொழுது இவருக்கு 97 வயதான நிலையில், சென்ற வருடம் முதல் உடல் நலம் குன்றி வீட்டிலேயே இருந்து வருகிறார்.

இப்படியொரு சூழ்நிலையில், அவரது உடல் நிலை மோசமாக சென்றவாரம் முழுவதும் தமிழகத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. இதனால் காவேரி மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலை நேற்று மீண்டும் மோசமானது.

தீவிர சிகிச்சைக்கு பின்னர், தற்பொழுது அபாய கட்டத்தை கடந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ள நிலையில்,  பல்வேறு அரசியல் பிரமுகர்கள் மருத்துவமனை சென்று, கருணாநிதி அவர்களின் உடல் நிலை குறித்து விசாரித்து வருகின்றனர்.


இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யாவும் சமீபத்தில் காவேரி மருத்துவமனை சென்று கலைஞர் அவர்களை பார்த்து விட்டு வீடு திரும்பி இருக்கிறார். அவர் உடன் தந்தை சிவக்குமார் மற்றும் 2D எண்டர்டெயின்மென்ட் ராஜசேகர பாண்டியன் ஆகியோரும் வந்திருந்தனர்.