Breaking News

விஜயின் 'சர்கார்' படத்திற்காக முட்டி மோதிக் கொள்ளும் டிவி சேனல்கள்..! ரிலீசுக்கு முன்பே மாஸ் காட்டும் விஜய்


வசூலில் மட்டுமல்லாது தமிழ் டிவி சேனல்களின் TRPயிலும் முடி சூடாத மன்னனாக வளம் வருபவர் நடிகர் விஜய். இவரது படங்கள் ஒளிபரப்பானால் போதும் TRP எகிறி விடும் என்ற காரணத்தினால், விஜயின் படங்களை வாங்க போட்டி போடுகின்றன தனியார் டிவி சேனல்கள்.

முன்னதாக விஜயின் மெர்சல் திரைப்படத்தின் சேட்டிலைட் உரிமத்தை 30 கோடி ரூபாய்க்கு வாங்கி இருந்தது 'ஜீ' நிறுவனம். இந்நிலையில் அவரது நடிப்பில் உருவாகி வரும் சர்கார் திரைப்படத்தின் உரிமத்தை வாங்கும் முயற்சியில் இப்பொழுதே இறங்கி விட்டன டிவி சேனல்கள்.

சமீபத்தில் வெளிவந்த தகவலின் படி முன்னணி டிவி சேனல் ஒன்று சர்கார் திரைப்படத்தின் ஹிந்தி டப் சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமத்திற்காக, 22 கோடி விலை பேசி இருப்பதாக தெரியவந்துள்ளது.

ஒரு தென்னிந்திய மொழி திரைப்படத்தி டப் உரிமம் இந்த விலைக்கு விற்பனையாவது மிகப்பெரிய விஷயம் எனும் நிலையில், பட ரிலீசுக்கு முன்பே சர்கார் படத்திற்கு இருக்கும் டிமாண்டானது படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.