Breaking News

இயக்குனர் கொடுத்த தொடர் தொல்லை..! பொன்மகள் வந்தாள் சீரியலில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட ஆயிசா...!


பிரபல தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'பொன்மகள் வந்தால்' எனும் டிவி தொடரில் ரோகினி கதாப்பதிரத்தில் நாயகியாக நடித்து வந்தவர் ஆயிசா. இவர் சமீபத்தில் அந்த தொடரில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்.

இது குறித்து அண்மையில் பிரபல பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டி அளித்திருக்கும் அவர், பல திடிக்கிடும் தகவல்களை வெளியிட்டு இருக்கிறார். சமீபகாலமாகவே சீரியல் நடிக நடிகைகளுக்கும் இயக்குனர்களுக்கும் இடையேயான மோதல் சம்பவங்கள் நடந்து வருகிறது.

இப்படி இருக்க நடிப்புக்கு புதுமுகமான ஆயிசா, பொன்மகள் வந்தால் படபிடிப்பில், நம்பி என்ற இயக்குனர் ஒருவரால் பலமுறை மரியாதை குறைவாக நடத்தப்பதாக தெரிகிறது.



சீனியர் நடிக நடிகைகளிடம் காட்டும் பணிவை இவரிடம் காட்டவில்லை எனவும், ஒருமுறை பிசியான படப்பிடிப்பின் போது குறைவான நேரமே இருந்த நிலையில் ஆயிசா உடை மாற்ற தாமதமான காரணத்தினால், அவர் உடைமாற்றுவதையும் பொருட்படுத்தாமல், அறைக்குள் வந்து தாறுமாறாக திட்டியதாகவும் ஆயிசா அந்த பேட்டியில் குறிப்பிட்டு இருந்தார்.

இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் தான் அழுது விட்டதாகவும், 'இனிமேல் இயக்குனர் இது போன்று கடுமையாக நடந்துகொள்ள கூடாது' என்ற கோரிக்கையை தயாரிப்பாளரிடம் வைத்ததாகவும் ஆனால், தயாரிப்பாளரோ  இயக்குனருக்கு ஆதரவாக பேசி, தன்னை அந்த தொடரினை விட்டு விலகி விடுமாறு கூறியதாகவும் தெரிவித்து இருந்தார்.

என்றாலும் பொறுத்துக் கொண்டு நடித்த அவரை, டிவி நிர்வாகத்திற்கு தொடர் நெருக்கடி கொடுத்து நீக்கி விட்டதகாவும் மன உளைச்சலோடு பேட்டி அளித்து இருக்கிறார்.