Breaking News

பலர் முன்னிலையில் திட்டி தீர்த்த இயக்குனர்..! தர்ம சங்கடத்தில் நெளிந்த நடிகைகள்


பாண்டிராஜின் இயக்கத்தில் விவசாயிகளை பெருமை படுத்தும் விதத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் கடைக்குட்டி சிங்கம். அண்மையில் திரைக்கு வந்த இந்த திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக வெற்றிப் படமாக அமைந்தது.

இதனை கொண்டாடும் விதத்தில், அப்படத்தின் நடிக நடிகைகள், இதர படக்குழுவினர் கலந்துகொண்ட வெற்றி விழா அண்மையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசி இருந்த இயக்குனர் பாண்டிராஜ், படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

அதோடு மட்டும் இல்லாமல், படபிடிப்பின் போது பீட்டா போன்ற அமைப்புகளால் தாங்கள் பட்ட கஷ்டங்கள் குறித்தும் கோபமாக பேசி இருந்தார். மேலும் நாயகிகள் சாயிசா மற்றும் ப்ரியா ஆகியோரின் மீது இருந்த கோபத்தையும் கொட்டி தீர்த்தார்.

சின்னத்திரை மூலம் பிரபலமடைந்த ப்ரியா பவானி சங்கர் படப்பிடிப்புக்கு நேரத்திற்கு வரவில்லை எனவும், படத்தின் ப்ரோமோசன் நிகழ்சிகளில் சாயிஷா உட்பட இரு நாயகிகளுமே கலந்து கொள்ளவில்லை என ஒரு மகிழ்ச்சியான தருணத்தில் குற்றம் சாட்டிய அவரால், தர்ம சங்கடத்தில் நாயகிகள் நெளிந்ததையும் பார்க்க முடிந்தது.