Breaking News

உங்க நாயகிக்கு என்ன ரேட்..? நடிகையை பாலியலுக்கு அழைத்த விநியோகஸ்தரால் பரபரப்பு


சினிமா துறையில் பாலியல் சார்ந்த பிரச்சனைகளும், அதற்கான எதிர்ப்புகளும் அதிகரித்து வரும் நிலையில், விநியோகஸ்தர் ஒருவர் நாயகிக்கு விலை பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தரமான படங்களை கொடுக்க வேண்டும் என்ற கனவோடு, சினிமா துறையில் காலடி எடுத்து வைத்த தயாரிப்பாளர்களில் ஒருவர் ரவீந்தர் சந்திரசேகரன். சினிமா துறையில் ஜெயிப்பதற்குள் என்னென்ன கஷ்டங்கள் பட வேண்டி இருக்கிறது என்பதை கண்கூடாக பார்த்த இவர், அவற்றை பற்றி பேசும் காணொளிகள் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகின்றன.

இவரது தயாரிப்பில் சமீபத்தில் வெளியான 'நட்புனா என்னனு தெரியுமா' திரைப்படம் ரிலீசுக்கு முன் சந்தித்த பிரச்சனைகள் குறித்தும் பேசி இருந்த அவர், வெளிநாட்டு விநியோகஸ்தரான பாண்டியன் என்பவர் தன் பட நாயகிக்கு விலைபேசியது குறித்த அதிர்ச்சியான தகவலை வெளியிட்டு இருக்கிறார்.

தனது படத்தை ரிலீஸ் செய்வதில் இடையூறு செய்வதாக அவர் மீது குற்றம் சாட்டிய  ரவீந்தர் சந்திரசேகரன், அதன் காரணமாக 'தன் பட நாயகி அட்ஜஸ்ட் செய்ய எவ்வளவு சார்ஜ் செய்வார்' என்று அந்த விநியோகஸ்தர் கேட்டதாகவும்,  அப்படியொரு கேள்வியை கேட்டதற்கு அந்த இடத்திலேயே அவரை பலர் முன்னிலையில் திட்டியாதகவும், அதனை மனதில் வைத்து கொண்டுதான் இவ்வாறு அவர் செய்கிறார் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.