Breaking News

19 வருட சினிமா வாழ்கையில் முதன் முதலாக நடிகை திரிஷா செய்த காரியம்..!


தமிழ் சினிமா வரலாற்றிலயே 19 வருடங்கள் முன்னணி நடிகையாக இருந்து வரும் ஒரே நடிகை என்றால் அது த்ரிஷா தான். ஜூனியர் ஆர்டிஸ்டாக 1999ம் ஆண்டு தனது பயணத்தை துவங்கிய இவர், இன்று பல இளம் நடிகைகளின் ரோல் மாடலாக இருக்கும் அளவிற்கு முன்னணி நாயகியாக வளர்ந்திருக்கிறார்.

இப்படி பட்ட பிரமாண்டமான 19 வருட சினிமா பயணத்தில் இது வரை செய்யாத ஒரு விசயத்தை, அவர் நடித்திருக்கும் மோகினி எனும் திரைப்படத்தில் செய்து இருக்கிறாரம் த்ரிஷா.

ரமணா மாதேஸ் இயக்கத்தில் திரிசா நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த 'மோகினி' ஹாரர் த்ரில்லர் திரைப்படமாக உருவாகி இருக்கிறது. இதன் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றிருந்த நிலையில், இத்திரைப்படம் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை வெளியிட்டு இருக்கிறார் திரிசா.


அதன் படி இந்த மோகினி திரைப்படம் வழக்கமான திகில் திரைப்படமாக இருக்காது எனவும், வியக்க வைக்கும் கிராபிக்ஸ் காட்சிகளுடன் முற்றிலும் புதிய ஒரு பரிணாமத்தில் இப்படம் உருவாகி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் தன் சினிமா பயணத்தில் முதன் முதலாக இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பது குறித்த தகவலையும் அவர் வெளியிட்டு இருந்தார். இதுவரை சிங்கிளாக வந்தே கைதட்டல்களை அள்ளிய திரிசா, டபுள் ஆக்சனில் நடித்து இருக்கும் இந்த தகவல் அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.