Breaking News

அப்துல்கலாமால் அந்த திரைப்படம் கைவிடப்பட்டது..! மருதநாயகம் குறித்து கமல் வெளியிட்ட சுவாரஸ்யமான தகவல்


கமல் ஹாசனின் லட்சிய திரைப்படம் என கூறப்பட்ட 'மருதநாயகம்' இன்று வரை கிடப்பில் போடப்பட்டு உள்ளது. கமலோ, சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு விரைவில் முழுநேர அரசியலிலும் ஈடுபட உள்ள நிலையில் அந்த திரைப்படம் உருவாகுவது சந்தேகம் தான் என்ற பேச்சும் கோலிவுட் வட்டாரத்தில் அடிபட ஆரம்பித்துள்ளது.

இப்படி இருக்க 20  வருடங்கள் முன்பு மருதநாயகம் படம் கிடப்பில் போடப்பதற்கு, 'இந்தியாவின் மறைந்து முன்னால் குடியரசு தலைவரும், இஸ்ரோ ஆராய்ச்சியாளருமான அப்துல்கலாம் தான் காரணம்' என்ற தகவலை வெளியிட்டு இருக்கிறார் நடிகர் கமல் ஹாசன்.


அவரது நடிப்பில் விரைவில் விஸ்வரூபம்-2 திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் அண்மையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில், '1998ம் ஆண்டு அப்துல்கலாமின் தலைமையில் நடத்தப்பட்ட பொக்ரான் அணுகுண்டு சோதனை, அமெரிக்காவின் கண்ணில் மண்ணை தூவியதன் காரணமாகதான் மருதநாயகம் திரைப்படம் கைவிடப்பதாதாக' கமல் தெரிவித்தார். 

அதாவது மருதநாயகம் படத்தினை தயாரிக்க இருந்தது ஒரு அமெரிக்க நிறுவனம். இந்நிலையில் அப்துல் கலாமின் இந்த சோதனை பங்கு சந்தைகளில்  பல மாற்றங்களை கொண்டு வர, பலத்த அடிவாங்கிய அந்நிறுவனம் படத்தயாரிப்பில் இருந்து பின்வாங்கி விட்டதாம்.