Breaking News

உலக நாயகனையே கதிகலங்க வைத்த லேடி சூப்பர் ஸ்டார்..!


காஸ்ட்லியான முன்னனி நாயகர்களின் படங்களை விட, சிறிய பட்சட்டில் உருவாகி ரசிகர்களை கவரும் படங்களை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர் தமிழ் நாட்டு விநியோகஸ்தர்கள்.

அதற்கு முன்னனி நாயகர்களின் திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி அடையாதது ஒரு காரணமாகவும் கூறப்பட்டு வருகிறது. இப்படி இருக்க நடிகர் கமல் ஹாசனின் விஸ்வரூபம் 2 திரைப்படமும், நயன்தாராவின் கோலமாவு கோகிலா திரைப்படமும் ஒரு நாளில் வெளியாக இருந்த நிலையில், அனைத்து விநியோகஸ்தர்களும் கோலமாவு கோகிலா திரைப்படத்தை வாங்க ஆர்வம் காட்டி இருக்கிறார்கள்.

இதனால் தியேட்டர்கள் எண்ணிகையிலும் பிரச்சனை எழுந்த நிலையில், தன் திரைப்படத்தின் நிலைகண்டு கதிகலங்கி போய்விட்டாராம் நடிகர் கமல் ஹாசன்.

இந்நிலையில், கோலமாவு கோகிலா படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகாவை தொடர்பு கொண்ட கமல் ஹாசனின் தரப்பு, அந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளிப் போடுமாறு கேட்டுக் கொள்ள,

தங்களது தயாரிப்பில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாக உள்ள, சபாஸ் நாயுடு, இந்தியன்-2 ஆகிய படங்களை மனதில் கொண்டு, கமல் கூறியபடியே கோலமாவு கோகிலா ரிலீஸ் தேதியை வருகிற ஆகஸ்ட் 17ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.