Breaking News

ரஜினியை மகிழ்விக்க ஹோட்டல் ஊழியர்கள் செய்த காரியம்..! வைரலாகும் வீடியோ


சமீபத்தில் வெளியான காலா திரைப்படத்தினை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் இப்பொழுது, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்பாராஜின் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இதன் படப்பிடிப்புகள் இமயமலையை ஒட்டிய பகுதிகளில் நடைபெற்று வரும் நிலையில், ரஜினியை மகிழ்விக்கும் பொருட்டு அவர் தங்கியிருக்கும் ஹோட்டலின் பணியாளர்கள் நடனமாடிய வீடியோ தற்பொழுது வெளிவந்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு, தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும், ஏன் ஜப்பான் போன்ற பிற நாடுகளிலும் எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கின்றனர். இப்படியொரு நட்சத்திர அந்தஸ்தில் இருக்கும் ரஜினியை பெருமை படுத்தும் விதத்தில், அவர் தங்கும் ஹோட்டல் நிறுவனங்கள் அவ்வப்போது இன்ப அதிர்ச்சி கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளன.

முன்னதாக டார்ஜிலிங் பகுதியில் அவர் தங்கியிருந்த ஹோட்டல், தங்களது வில்லா ஒன்றிற்கு ரஜினியின் பெயரை சூட்டியது மட்டும் அல்லாமல், தங்களது பிரபல டீ ஒன்றிக்கும் 'தலைவா ஸ்பெசல்' என்று பெயர் மாற்றம் செய்தது.

இந்நிலையில் தற்பொழுது ஹோட்டல் பணியாளர்கள் அனைவரும் சென்னை எக்ஸ்ப்ரெஸ் படத்தில் ரஜினியின் புகழ்பாடும் விதத்தில் இடம் பெற்று இருந்த லுங்கி டான்ஸ் பாடலுக்கு, ரஜினியின் முன்பே நடனமாடி இன்ப அதிர்ச்சி அளித்திருக்கிறார்கள். அதனை மகிழ்ச்சியுடன் நடிகர் ரஜினி கண்டு கழிக்கும் வீடியோவானது தற்பொழுது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியும் வருகிறது.