Breaking News

காதலில் விழுந்த பிக்பாஸ் ஜூலி..! காதலர் யார் தெரியுமா..?


ஜல்லிக்கட்டு போராட்டம், பிக்பாஸ் நிகழ்ச்சி என தமிழகத்தில் சென்ற வருடம் அதிக அளவில் பேசப்பட்ட ஒருவர் மரிய ஜூலியானா. செவிலியராக பணிபுரிந்த அவரது வாழ்க்கை இந்த திடீர் பிரபலத்தின் காரணமாக அப்படியே மாறி போனது.

தற்பொழுது சினிமா, சின்னத்திரை, விளம்பரம் என நடிகையாக வலம்வந்து கொண்டிருக்கும் இவர், இளம் நடிகர் ஒருவருடன் காதலில் விழுந்து இருப்பதாக கிசுகிசுக்கபட்டு வருகிறது.

சர்ச்சைகளுக்கு பெயர் போனவரான இந்த பிக்பாஸ் ஜூலி, சில மாதங்களுக்கு முன்பு தான் அரசியலில் இறங்கபோவதாக வீடியோக்களை வெளியிட்டு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தார்.

ஆனால் அரசியல் முடிவை ஓரம் கட்டி விட்டு, காதலில் இறங்கி இருப்பதாகதான் காட்டுகிறது அவரது சமீபத்திய சமூக வலைதள பதிவுகள்.விளம்பர மாடல் மற்றும் இளம் நடிகரான மார்க் ஹம்ரான் என்பவருடன் தற்பொழுது நெருக்கமாக பழகி வரும் ஜூலி, இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படங்களையும் அடிக்கடி வெளியிட்டு வருகிறார்.


அந்த பதிவுகளில் வார்த்தைக்கு வார்த்தை 'நெருங்கிய நண்பர்' என்ற சொல்லையும் இவர் உபயோகித்து வந்தாலும், 'உண்மையை சொல்லுங்கள் இது உங்கள் காதலர் தானே' என்ற கருத்துக்களை இட்டு, இக்கால காதல் சூட்சமத்தை உணர்ந்தவர்களாய் ஜூலியின் காதலர் இவர்தான் எனவும் உறுதி படுத்தி இருக்கின்றனர் ரசிகர்கள்.