Breaking News

விவாகரத்திற்கு பிறகும் பட்டையை கிளப்பும் அமலா பால்..!


தமிழ் சினிமாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, திருமணமாகி விட்டால் முன்னணி நாயகியாக இருந்தாலும் ஓரம் கட்டி விடுவார்கள் திரையுலகினர். ஆனால் அந்த நிலை தற்பொழுது படிப்படியாக மாறி வருகிறது.

இதற்கு உதாரணமாக நடிகை சமந்தாவை கூறலாம். தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட இவர் தொடர்ந்து முன்னணி நாயகர்களின் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அதிலும், திருமணத்திற்கு பின் இவர் நடிப்பில் வெளிவந்த அனைத்து படங்களுமே மெகா ஹிட். இவரை போலவே திருமணம் ஆகி அதன் முறிவுக்கு பின்னரும் நல்ல படவாய்ப்புகளை பெற்று வரும் நடிகை அமலா பால்.


இவரது நடிப்பில் விரைவில் ராட்சஷன் எனும் தமிழ் திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில், தற்பொழுது பாலிவுட் திரைப்படம் ஒன்றிலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

நரேஷ் மல்ஹோத்ரா இயக்க இருக்கும் இந்த திரைப்படத்தில், பாலிவுட் நடிகர் அர்ஜுன் ராம்பால் கதாநாயகனாக நடிக்கிறார். வருகிற அக்டோபர் மாதம் முதல் இமய மலையில் துவங்க இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புகளை தீவிரமாக எதிர்பார்த்து காத்திருக்கிறாராம் அமலாபால்.