Breaking News

'அஜித் மிகவும் திறமையானவர்' - புகழும் MIT பல்கலைகழக மாணவர்கள்


நடிகர் அஜித் சினிமா, நடிப்பு தாண்டி பல்வேறு துறைகளில் தனது திறமையை நிரூபித்து வரும் நடிகர்களில் ஒருவர். கார், பைக் பந்தயம், துப்பாக்கி சுடுதல், வானூர்தி பொறியியல் என தான் கால்வைக்கும் இடங்களில் எல்லாம் சிறந்து விளங்கும் நடிகர் அஜித் சில மாதங்களுக்கு முன்,  அண்ணா பல்கலைகழகத்தின் ஆளில்லா விமான பிரிவின் ஆலோசகராகவும் நியமிக்கபட்டார்.

இவரது மாணவர்கள் உருவாக்கிய ட்ரோன் ரக விமானம், 6 மணி நேரம் 7 நிமிடங்கள் தொடர்ந்து வானில் பறந்து, அண்மையில் உலக சாதனையும் படைத்திருந்தது.

இந்நிலையில், அந்த மாணவர்கள் நடிகர் அஜித்தின் திறமை குறித்து 'நடிகர் அஜித் ஒரு குட்டி விமானத்தை கலட்டி அதனை குறைந்த நேரத்தில் மீண்டும் இணைக்கும் அளவிற்கு திறமையானவர். விமான வடிவைப்பு மற்றும் எரிபொருள் சேமிப்பில் அவர் கொடுத்த அறிவுரைகள் எங்களுக்கு பெரிதும் உதவி இருக்கின்றன' என புகழ்ந்து பேசியுள்ளனர்.

அஜித் ஆலோசகராக இருக்கும் இந்த குழு, ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ள 'யூஏவி மெடிக்கல் செலேஞ்' எனும் உலகளாவிய போட்டியின் இறுதி சுற்றுக்கு முன்னேறி இருப்பதும், அதில் அஜித்தின் மாபெரும் பங்களிப்பும் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது.