Sunday, 3 June 2018

வைரல் வீடியோ : திருட்டுத்தனமாக படம்பிடித்து விஜயிடம் சிக்கிய ரசிகர்..!

vijay-62-shooting-spot-video
vijay 62 shooting spot

பெரிய பட்ஜெட் மற்றும் ரஜினி, அஜித், விஜய் போன்ற முன்னணி நாயகர்களின் படங்களின் படப்பிடிப்பு பகுதிகளில், வேடிக்கை பார்பவர்களுக்கும் மிகுந்த கெடுபிடிகள் விதிக்கப்படுவது வழக்கம்.

செல்போன் உபயோகிக்க கூடாது, போட்டோ, வீடியோ எடுக்ககூடாது போன்ற கட்டுப்பாடுகள் கடுமையாக பின்பற்றபட்டும், ஒரு சிலரால் படக்குழுவினர் கட்டிகாக்க நினைக்கும் ரகசியங்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. 

இதுபோலதான், 2.0 டீசர், விஜய் 62 படப்பிடிப்பு பகுதி புகைப்படங்கள் போன்றவை சமூக வலைதளங்களில் திருட்டுத்தனமாக வெளியாகி இருந்தது.

 இந்நிலையில் நடிகர் விஜயின் 62வது படத்தின் ஷூட்டிங்கின் போது, ரசிகர் ஒருவர் விதிகளை மீறி படம்பிடிக்க, அதனை நடிகர் விஜய் கண்டறிந்து, 'டெலிட் செய்யுமாறு கூறும்' காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.    

என்னதான் நடிகர் விஜய் வெற்றிகரமாக ஒரு ஊடுருவலை தடுத்திருந்தாலும், அந்த செயல் அருகிலிருந்த மற்றொரு ரசிகரால் படம் பிடிக்கப்பட்டு வெளியாகி இருப்பதுதான் கொடுமை.

Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();