Wednesday, 30 May 2018

காதலருடன் லிப் லாக்..! வீடியோ வெளியிட்ட எமி ஜாக்சன்


இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நடிகையான எமி ஜாக்சன், மதராசப்பட்டினம் படத்தின் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்து இந்திய பெண்ணாக வளம் வர முயற்சித்தாலும், தற்பொழுது வாய்ப்புக்கள் இல்லாத காரணத்தினால்  மீண்டும் இங்கிலாந்தை நோக்கி பறந்து விட்டார்.

மேலும் சூப்பர் கேர்ள் எனும் அமெரிக்க டிவி தொடர் ஒன்றிலும் நடித்து வரும் அவர், அங்கேயும் ரசிகர்களை பெற துவங்கியுள்ளார். இதனால் அந்நாட்டு ரசிகர்களை கவரும் விதத்தில் படு கவர்ச்சி புகைப்படங்களையும் காணொளிகளையும் வெளியிட்டு வருகிறார்.


மேலும் ஜார்ச் எனும் நபரையும் காதலித்து வரும் எமி, அவருடன் நெருக்கமாக இருக்கும் காணொளிகளையும் மேற்கத்திய கலாசாரத்தை மனதில் கொண்டு வெளியிட தயங்குவதில்லை.

அதன் படி சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள காணொளி ஒன்றில், காதலர் ஜார்ஜ்ஜூக்கு உதட்டு முத்தம் வழங்குகிறார். இந்திய சினிமாவை பொறுத்தவரை, திரைப்படங்களில் லிப் லாக் காட்சிகளை பார்ப்பதே அரிது என்றிருக்கும் வேளையில், தன் சமூக வலைதள பக்கங்களிலேயே இது போன்ற உண்மை காட்சிகளை சிறிதும் தயக்கமின்றி பகிர்ந்து வருகிறார் எமி ஜாக்சன்.    


Disqus Comments
'