Tuesday, 3 April 2018

யுவன் சங்கர் ராஜாவின் வீட்டில் விலையுயர்ந்த கார் திருட்டு


கோடிகளில் புரளும் சினிமா பிரபலங்கள் அனைவரிடமும் இருக்கும் பொதுவான விஷயம் என்று விலையுயர்ந்த கார்களை சொல்லலாம். முக்கிய விழாக்களுக்கு மட்டும் அவர்களால் பயன்படுத்தப்படும் இந்த சொகுசு கார்கள் பெரும்பாலும் வீடுகளில் அலங்காரப் பொருளாகத் தான் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.



தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜாவும் விலையுயர்ந்த சொகுசு கார் ஒன்றினை வைத்திருந்த நிலையில், அந்த காரானது  சமீபத்தில் திருடப்பட்டுள்ளது.

பிரபல ஹாலிவுட் திரைப்படமான 'ஜேம்ஸ் பாண்ட்' தொகுப்பின் ரசிகரான யுவன் சங்கர் ராஜா கடந்த 2015ம் ஆண்டு அப்படத்தில் இடம்பெற்றிருந்த, சுமார் அறுபது லட்ச ரூபாய் மதிப்புடைய 'ஆஸ்டன் மார்டின்' ரக கார் ஒன்றினை வாங்கியிருந்தார்.



இந்நிலையில் சில நாட்களுக்கு முன் அந்த காரானது திருடப்பட்டு விட்டதாக, சென்னை எக்மோர் காவல் நிலையத்தில் யுவன் சங்கர் ராஜாவின் சார்பில், அவரது நண்பர் ஒருவர் புகார் அளித்திருக்கிறார். மேலும் ஓட்டுனரான நவாஸ் என்பவர்தான் அந்த காரை திருடி இருக்க வேண்டும் என்ற குற்றச்சாட்டையும் வைத்துள்ளது யுவன் தரப்பு.   
  
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();