Breaking News

வீரத்திற்கும் - விஸ்வாசத்திற்கும் உள்ள அந்த ஒரு சம்பந்தம் ; வெளியான தகவல்கள்


நடிகர் அஜித் வீரம், வேதாளம், விவேகம் என அடுத்தடுத்து சிவாவின் இயக்கத்தில் தொடர்ந்து நடித்து விட்டார். இந்த படங்களில் வீரம் மற்றும் வேதாளம் நல்ல வரவேற்பை பெற்றாலும் விவேகம் எதிர்பார்த்த அளவிற்கு சரியாக ஓடவில்லை.

என்றாலும் சிவாவை, 'ஒரு தோல்வி இயக்குனர் என்ற பெயரோடு விட்டு சென்றுவிடக் கூடாது' என்ற காரணத்திற்காக நான்காவது முறையாக அவரின் இயக்கத்திலேயே விஸ்வாசம் படத்திலும் நடிக்க முடிவு செய்தார் நடிகர் அஜித்.


அவரின் இந்த முடிவு ஒரு சில ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியதால் இந்த முறை ஒரு வெற்றிப் படத்தைக் கொடுத்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார் இயக்குனர் சிவா.

இந்நிலையில் விஸ்வாசம் படத்தின் கதைக்களம் இதுதான் என்று ஒரு தகவல் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. அதன்படி வீரம் திரைப்படத்தை போலவே குடும்ப சென்டிமென்ட் விஸ்வாசம் படத்திலும் கொஞ்சம் தூக்கலாக இருக்கும் என தெரிகிறது.


மேலும் இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் வடசென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற இருக்கிறது. இதனால் அஜித் வட சென்னை வாசியாக இப்படத்தில் நடிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப் படுகிறது.