Friday, 6 April 2018

சிவ கார்த்திகேயனுக்காக வில்லனாகவும் நடிக்க தயார் ; வாக்கு கொடுத்த முன்னணி நடிகர்


சினிமா துறையில் பின்னணி ஏதும் இல்லாமல் உச்சம் தொட்டவர்கள் ஒரு சிலரே, அவர்களுள் குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு உள்ள நடிகர் சிவகார்த்திகேயன். ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்து, இன்று தான் அடைந்திருக்கும் முன்னணி நடிகர் என்ற இடத்தை பெற அவர் பட்ட கஷ்டங்கள் மக்கள் அறிந்த ஒன்றே.

சிவ கார்த்திகேயன் விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்தபோதே அவர் மீது பல்வேறு சினிமா பிரபலங்கள், இவர் சினிமாவில் பெரிய ஆளாக வருவார் என்ற தங்களுடைய நம்பிக்கையை வெளிப்படையாகவே கூறியிருந்தனர்.



அந்த வகையில் சிவ கார்த்திகேயன் வெள்ளித்திரையில் நாயகனாக வரலாம் என்ற நம்பிக்கையை முதலில் கொடுத்தவர் நடிகர் விக்ரம் தான். அந்த சமயத்தில் 'நீ ஹீரோவாக நடிக்கும் திரைப்படத்தில் எனக்கு வில்லன் ரோல் கிடைத்தால் கூட நான் ஏற்று நடிப்பேன்' என நடிகர் விக்ரம் கூறியிருந்த தகவலை சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கூறியிருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.



மேலும் நல்ல கதையும் நேரமும் அமைந்தால் நாங்கள் இருவரும் ஒரே திரைப்படத்தில் ஹீரோ, வில்லனாகவும் நடிக்கலாம் எனவும் நடிகர் சிவகார்த்திகேயன் குறிப்பிட்டிருக்கிறார். சிம்பிளா சொல்லனும்னா விக்ரம் வேதா போன்ற மாஸான கதை கிடைத்தால் நடிப்போம் என்றிருக்கிறார் அவர்.

    
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();