Sunday, 8 April 2018

ஸ்டெர்லைட் மற்றும் காவிரி மேலாண்மை வாரிய போராட்டத்தில் நடிகர் விஜய் ; புகைப்படங்கள் உள்ளே


தமிழகத்திற்கு கர்நாடகாவிலிருந்து வழங்கப்படும் காவிரி நீரின் அளவு குறைக்கப்பட்டதை தொடர்ந்தும், பொது மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்தை தடுக்க கோரியும் தமிழகம் முழுவதும் அரிசியல் கட்சிகளின் சார்பிலும், மக்களின் சார்பிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.



இந்த நிலையில் இந்த பிரச்சனைகளுக்கெதிராக மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் நோக்கத்தில், தமிழ் நடிகர் சங்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில், இன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணிவரை அறவழியில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.



பல்வேறு சினிமா நட்சதிரங்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நடிகர் விஜய், போராட்டதிற்கு சரியான நேரத்தில் ஆஜர் ஆனார். அவர் கலந்து கொண்ட புகைப்படங்கள் இன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


மக்களுக்கெதிரான பிரச்சனைகளுக்கு தவறாது குரல் கொடுக்கும் நடிகர் விஜய், காவிரி மேலாண்மை வாரியம், ஸ்டெர்லைட் பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்திருப்பது தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();