Breaking News

எழுந்து நிற்காமல் தமிழ் தாய் வாழ்த்தை நடிகர் விஜய் அவமதித்தாரா? ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரசிகர்கள்



காவேரி மேலாண்மை வாரியம் அமைத்தல் பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடுதல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில். மக்களுக்கு ஆதரவாக நடிகர் சங்கமும் மௌன போராட்டத்தை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று நடத்தியது.

இதில் நடிகர் விஜய் போராட்டம் ஆரம்பிக்கும் ஐந்து நிமிடத்திற்கு முன் ஆஜராகி ரசிகர்களுக்கும் தமிழ் மக்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தினார். என்றாலும் வழக்கம் போல போராட்டத்திற்கு கருப்பு நிற உடை அணியவில்லை, பாதியில் கிளம்பி விட்டார், தமிழ் தாய் வாழ்த்திற்கு எழுந்து நிற்கவில்லை என வரிசையாக குறை கூறிக் கொண்டும், புரளிகளயும் கிளப்பிவிட்டது ஒரு கூட்டம்.



இதனால் நடிகர் விஜயின் ரசிகர்கள் ஒரு மனிதன் முதல் ஆளாக வந்தும் இப்படி குறை கூறுகிறார்களே என தங்கள் மனக்குமுறல்களை சமூக வலைதளங்களில் தெரிவித்து வந்ததுடன், தமிழ் தாய் வாழ்த்திற்கு எழுந்து நிற்கவில்லை என்ற குற்றச்சாட்டிற்கு ஆதாரத்துடன் பதிலடி கொடுத்தனர்.

அதன் படி போராட்டத்தின் போது நடிகர் நாசர் தமிழ் தாய் வாழ்த்து பாடலைப் பாட நடிகர் விஜய் உள்ளிட்ட நடிகர்கள் எழுந்து நிற்கும் காணொளியை பகிர்ந்து புரளி கிளப்பியவர்களுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.