Breaking News

நடிகர் விஜய் அரசியலுக்கு வரக் கூடாது ; தந்தை சந்திரசேகர் அதிரடி


முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் தமிழகம் சரியான தலைமை இன்றி தள்ளாடி வருகிறது. இதனால் ஏற்பட்ட வெற்றிடத்தினை நிரப்ப ரஜினி, கமல் என சினிமா உலகின் ஜாம்பவான்கள் அரசியல் களம் கண்டனர்.

அதற்கு முன் நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என நடிகர் விஜயை விட தீவிரமாக இருந்த அவரின் தந்தை S.A. சந்திரசேகர், ரஜினியின் அரசியல் வருகையை ஆமோதித்து விஜயின் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தார்.


இந்நிலையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில், 'நடிகர் விஜய் அரசியலுக்கு இப்போது வரக்கூடாது' எனக் கூறி, மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். அதில் பேசிய 'சந்திரசேகர், ரஜினி மற்றும் கமலுக்கு முன்னரே அரசியலில் இறங்க நானும் விஜய்யும்  முடிவு செய்திருந்தோம்.

அதற்காக அவரின் மக்கள் மன்றத்தின் மூலம் ரசிகர்களை அணுகி ஆலோசனைகளையும் பெற்றுவந்தார் நடிகர் விஜய். ஆனால் ரஜினி, கமல் என இரு பெரும் ஜாம்பவான்கள் அரசியலில் களம் கண்டிருக்கும் இந்த வேளையில் விஜய் அரசியலுக்கு வந்தால் அது சரியாக இருக்காது.


அதனால் அவர் இன்னும் சில வருடங்கள் சினிமாவில் ரசிகர்களை சந்தோசப்படுத்தட்டும். அரசியல் வருகை குறித்து அதன் பின் பார்த்துக் கொள்ளலாம்' என தெரிவித்திருக்கிறார்.