Tuesday, 10 April 2018

'விஜய் அஜித்னு அடிச்சுகிட்டாலும்' காவிரிக்காக இணைந்து அசத்திய ரசிகர்கள்


அஜித் - விஜய், தனுஸ் - சிம்பு, ரஜினி - கமல் என நடிகர்களுக்காக அடித்துக்கொண்டாலும் தமிழகத்திற்கு ஒரு பிரச்சனை என்றாகும் போது தமிழனாய் ஒன்றிணைந்து போராடுவது நம் சினிமா ரசிகர்களின் வழக்கம்.

அந்த வகையில் தமிழகத்தில் தற்பொழுது சென்று கொண்டிருக்கும் காவிரி மற்றும் ஸ்டெர்லைட் பிரச்சனைகளுக்காக ஒன்றிணைந்து குரல் கொடுத்திருக்கின்றனர் சிதம்பரத்தை சேர்ந்த, தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர்களின் ரசிகர்கள்.


இவர்கள் இணைந்து போராடிய புகைப்படங்கள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் பலர் ரசிகர்களின் இந்த ஒற்றுமையானது நம் தமிழக அரசியல் வாதிகளிடமும் இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஏனென்றால் இந்த பிரச்சனைகளுக்காக போராட்டம் நடத்திய அரசியல்வாதிகள் எவரும் ஒன்றிணைந்து போராடவில்லை. பிரச்சனயை தீர்க்கும் முனைப்போடு அல்லாமல் தங்களின் கட்சியின் விளம்பரத்திற்காக கடமைக்கு வெவ்வேறு நாட்களில் போராடிவிட்டு சென்றனர்.

இந்நிலையில் ஒருவருக்கொருவர் எதிரிகளாகவே வாழும் விஜய் அஜித் ரசிகர்களைப் போன்றவர்கள் தமிழகத்திற்காக இணைந்து போராடியிருப்பது  பல்வேறு தரப்பு மக்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.

    
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();