Monday, 9 April 2018

காதலனை கதாநாயகனாக்கி டூயட் பாடப்போகும் நயன்தாரா

vignesh-shivan-as-actor

நடிகை நயன்தாரா பல காதல்களை தாண்டி தற்பொழுது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார்.  நானும் ரௌடிதான் படத்தின் போது காதலில் இணைந்த இந்த ஜோடி, இதுவரை எந்த பிரச்சனையும் இல்லாமல் சுமூகமாக காதல் வாழ்க்கையை நடத்திவருகின்றனர்.

இந்நிலையில் அடுத்தகட்டமாக காதலன் விக்னேஷ் சிவனை கதாநாயகனாக்கி வெள்ளித்திரையிலும் டூயட் பாடும் முயற்சியில் இறங்கி இருக்கிறார் நடிகை நயன்தாரா.

vignesh-shivan-as-actor

சமீபத்தில் வெளிவந்த தகவலின்படி தங்களுகேற்ற காதல் கதையை தேர்வு செய்திருக்கும் அவர், நாயகனாக விக்னேஷ் சிவன் நடிக்க ஜோடியாக தானே நடிக்க இருக்கிறாராம். மேலும் குறிப்பிட்ட திரைப்படத்தை நடிகை நயன்தாராவே தயாரிக்கவும் இருக்கிறார்.

இதுவரை கதையம்சம் உள்ள திரைப்படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்துவந்த நயன்தாரா நீண்ட நாட்களுக்கும் பிறகு தன் காதலனுக்காக ரொமாண்டிக் திரைப்படத்தில் முழு நேர ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க இருக்கிறார்.

vignesh-shivan-as-actor

மேலும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு நடிப்பு ஒன்றும் புதிதல்ல, தான் உதவி இயக்குனராக பணிபுரிந்த போதே தனுஷின் VIP உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருந்தார்.
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();