Wednesday, 18 April 2018

காவிரி விவகாரத்தில் வாய் கொடுத்து வாங்கி கட்டிக்கொண்ட உதயநிதி ; வச்சி செய்யும் நெட்டிசன்கள்


நடிகரும் பிரபல அரசியல்வாதியான மு.க. ஸ்டாலினின் புதல்வனுமான உதயநிதி ஸ்டாலின் காவிரி விவகாரம் குறித்து வாய்க் கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்ட சம்பவம் சமீபத்தில் நிகழ்ந்தேறியுள்ளது.

காவிரி மற்றும் ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனைகளில் இந்திய அளவில் மக்களின் கவனத்தை ஈர்க்க, சென்னையில் நடைபெற்ற IPL போட்டிகளின் போது போராட்டம் வெடித்தது.

இதனால் IPL நிர்வாகம் சென்னையில் நடைபெற இருந்த மற்ற போட்டிகளை பூனேவிற்கு மாற்றியது. இந்நிலையில் சமீபத்தில் கருத்து ஒன்றினை தெரிவித்திருந்த உதயநிதி, "ஐபில் போட்டிகள் போல் தமிழ்நாட்டில் தமிழ் திரைப்படங்கள் வெளியீடுகளும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை ஒத்திவைக்கப்படுமா.. ? செயல்படாத மத்திய மாநில அரசுகளின் கவனத்தை இன்னும் அதிகமாக ஈர்க்க உதவுமே.." என்றிருந்தார்.




இதற்கு நெட்டிசன்கள் பலர், "சன் மற்றும் கலைஞர் டிவி நாடகங்கள் ஒத்தி வைக்கடுமா... இன்னும் மத்திய மாநில அரசை கவனத்தை திருப்ப " என்பது போல சன் குழுமத்தின் பிற தொழில்களையும் குறிப்பிட்டு நக்கலாக பதிலளித்து வருகின்றனர்.
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();