Monday, 16 April 2018

திரிஷாவை விடாது துறத்தும் சாமி-2 படக்குழு


சீயான் விக்ரம், திரிஷா நடிப்பில் ஹரியின் இயக்கத்தில் கடந்த 2003ம் ஆண்டு வெளிவந்து சக்கை போடு போட்ட திரைப்படம் சாமி. இந்த படத்தின் இரண்டாம் பாகம் சாமி ஸ்கொயர் என்ற பெயரில் தயாராகி வருகிறது.

விக்ரம் இரட்டை வேடத்தில் அசத்தி இருக்கும் இந்த திரைப்படத்தில் மகன் விக்ரமுக்கு ஜோடியாக, கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். முதல் பாகத்தில் இடம் பெற்றிருந்த சனியன் சகடை கதாப்பாத்திரத்தின் மகனாக நடிக்கும் பாபி சிம்ஹா இந்த திரைப்படத்தில் வில்லனாக மிரட்ட இருக்கிறார்.


மேலும் இப்படத்தின் முதல் பாகத்தில் நடித்திருந்த நடிகை திரிஷா, இளம் விக்ரமிற்கு அம்மாவாக ஒரு சில நிமிடங்கள் வந்து செல்லும் காட்சிகள் இரண்டாம் பாகத்தில் இருக்கிறதாம்.

ஆனால் ஆரம்பத்தில் கதையே கேட்காமல் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஒகே சொன்ன நடிகை திரிஷா, அம்மா வேடம் என்றதும் இடையிலேயே விலகி விட்டார்.


இதனால் அவரின் மீது நடிகர் சங்கத்தில் புகாரும் அளிக்கப்பட்டது. என்றாலும் கொஞ்சம் கூட அசராத நடிகை திரிஷா, தொடர்ந்து இப்படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்து வருகிறார்.

சாமி ஸ்கொயர் படக்குழுவும் திரிஷாவை எப்படியாவது நடிக்க வைத்துவிட வேண்டும், என விடாது வேண்டுகோள் விடுத்துக்கொண்டு அவரை துறத்தி வருகிறது.


Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();