Thursday, 12 April 2018

சினிமாவில் நடிப்பதற்காக காதலனை கழட்டிவிட்ட சீரியல் நடிகை


'அங்கே நடித்தால் சினிமாவிற்குள் வர முடியாது' என்றிருந்த காலம் போய், இன்று சினிமாவில் ஜொலிக்க ஒரு நல்ல அடித்தளமாக இருந்து வருகிறது சின்னத்திரை சீரியல்கள். பெண்கள் மட்டும் பார்த்துக் கொண்ட்ருந்த சீரியல்களை இன்று குழந்தைகள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் பார்க்க தொடங்கி விட்டதால்தான் இந்த மாற்றம்.

அப்படி சின்னத்திரையில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் இந்த நடிகை. சின்னத்திரையில் நடிக்கும் போது 'எப்பா..! என்னா அழகுடா சாமி..!' என இவருக்காகவே சீரியல் பார்க்க ஆரம்பித்தனர் இளசுகள். விளைவு வீட்டு வாசலை வந்து தட்டின சினிமா வாய்ப்புகள்.

அந்த சமயத்தில் காதலன் ஒருவருடன் விரைவில் திருமணம் என வெளியே ஓப்பனாகவே சொல்லி இருந்த நடிகை, ஒரு படம் நடித்த பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என காதல் காமெடி படம் ஒன்றில் ஒப்பந்தமானார்.

படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறவே இதுவும் நல்ல இருக்கே என  திருமணத்தை தள்ளிவைத்துவிட்டு தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமானார் . காத்திருந்த காதலனோ இதனால் கோபித்துக் கொள்ள தற்பொழுது அந்த காதல் முறிந்துவிட்டதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு.

Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();